ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது



பெரும் வெளியில்
பேய்க்காற்றின்
கரங்களால்
எறியப்பட்ட
மேகங்கள்
ஒன்றுடன் ஒன்று
புணர்ந்து கொண்டிருந்தது

வெட்கங்கெட்டுப் போய்
சத்தமிட்டவாறே
அவை சேர்ந்து
திரிகையில்
காமக் குரோதம் கொண்ட
ஒளிக்கீற்று ஒன்று
உலகிலோர் உயிர்
உறிஞ்சிப் போனது

காமப்பசி
அடங்கிப்போனதற்கு
அறிகுறியென
சுக்கிலமாய் வழிந்தது
மழைத் துளிகள்

அதில் எந்தத்
துளியும் கழுவிடவில்லை
அப்பிஞ்சை சுமந்த
காம்பின் கண்ணீரை.


பி.கு: மே 20, 2009 அன்று கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு 9ம்
வகுப்பு மாணவன் உயிரை பலி வாங்கியது மின்னல். அன்று எழுதியது.

6 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

ஒளியவன் கீற்று மட்டுமல்ல கூற்றும் அருமை.

மிக்க நன்றி அன்பரே.

nalla kovam..........

நன்றி இரசிகை.

i dont know, whether i should say this poem is good or feel for that child.

anyhow this is a good way of telling condolences. nice poem oliyavan. keep doing.

நன்றி தங்கமாரி. முடிந்தால் தமிழை ஆங்கிலத்தில் தட்டச்சி அனுப்பவும். :)