ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது



நாயொன்றை சொந்தமாக்கினான்,
அழகுப் பதுமையது
அவன் மடிச் சூட்டிலேயே
அதைத் தாங்கிக்கொண்டான்

குளித்தல்,
நடத்தல்,
துயில்தல்,
உண்ணுதல்,
விளையாடுதல்
இவையெல்லாம்
அவன் எண்ணப்படியே!

'இந்தப் பண்டிகைக்கு
ஜீன்ஸ் எடுத்துக் கொடுங்கப்பா'

'அடி... நாயே...
பொட்டப்புள்ளையா லட்சணமா இரு'

அதிகார சத்தத்தில் பயந்துபோன
அடிமை நாய்
எஜமானன் காலடியிலேயே
முகம் புதைத்துக்கொண்டது!

9 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

'அடி... நாயே...
பொட்டப்புள்ளையா லட்சணமா இரு'

அதிகார சத்தத்தில் பயந்துபோன
அடிமை நாய்]]


அருமை - எதார்த்தம் - எள்ளல்

unmailiye girls neraya per ippaditan irukkaangal. once again good kavithai oliyavan.

நன்றி ஜமால், தங்கமாரி.

அருமையான மறுக்க முடியாத வரிகள் அண்ணே ..
Thanks and regards,

தொடர்ந்து வாசித்து வருவதற்கும் பின்னூட்டமிடுவதற்கும் நன்றி சீமாங்கனி அவர்களே.

அழைப்பிதல்

நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்

வரவேற்பு : கவிதைகள்

அன்புடன்,
சந்தான சங்கர்.

(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)

every dog has a day.......:)

innum niraya yezhuthu...

padam pidichchirukku..........

kannai moodik konda penmai...!!

thiranthu vaikka aasaip padum oliyavan:)

நன்றி அண்ணி. அந்தப் படத்தை நான் இட்டதற்கு வேறு காரணம் இருந்தது.

ஒரு பெண் உள்ளுக்குள் அழுது புழுங்கினாலும் வெளியே சிரிப்பது போன்ற ஒரு முகமூடியை இது போன்ற சமயத்தில் அணிந்து கொள்கிறாள் என்பதற்காகவே அந்தப் படத்தை இட்டிருக்கிறேன்.