ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது




சொற்களுக்கு
முன்பும் பின்பும்
மௌனமே இருக்கிறது

உலகின் எந்த மொழிக்கும்
பொதுவானவைகள் அவைகள்

மௌனம்
மீட்டமுடியாத இசை
அவை துளையிடப்படாத
புல்லாங்குழலுக்கே புரிந்தவை

மௌனம் ஞானத்தின் மொழி
அவற்றில் எல்லாவற்றிற்குமான
பதில்களும் இருக்கிறது

மௌனம் புனிதம் - அது
புதிய சொற்களின் கருவறை
பழைய சொற்களின் ஜீவசமாதி

மௌனம் அகிம்சை
அவைகள் சொற்காயங்களை
ஏற்படுத்துவதில்லை

மௌனம் யாரையும் உடைப்பதில்லை
உணராதவர்கள் அதிலிருந்து
தவறான சொற்களைப்
புரிந்து உடைகிறார்கள்

மௌனம் நிரந்தரம்
இல்லைகள் ஆமென்றாவது
அங்கேதான்

மௌனம் கடவுளின் மொழி
அதனால்தான் பூக்கள்
அதைப் பேசுகின்றன

8 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

:)

sabaash!!

padam xcellent!!!!

மெளனம் கவிதையாய் பேசுகிறது

நன்றி அண்ணி. இந்த மௌனத்தை சத்தம் போட்டு உங்ககிட்டதானே முதலில் வாசித்து காட்டினேன்! :)

வாங்க மஞ்சூர் அண்ணா, உங்களது பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

தனிமையாய் இருப்பதைவிட
மௌனமாய் இருப்பதே மேல்.

எனும் வரிகளை நினைவுபடுத்துகிறது.

சத்தமாக வாசித்தாலும்
மௌனமாகவே உணரமுடியும் வார்த்தைகள்.

நன்றி அன்பரே சந்தான சங்கர்.

Rubauma wrotes;
மெளனம் ennpathu ennai pooruthavari manathallum மெளனம் sathippathu.

nandri uma. mounam avaravar viruppam pola amaiyum.