ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது
ஆழி வெப்பத்தில்
ஆவியாதலும்
மழையாதலுமாக
மாறிக்கொண்டே இருக்கிறது
வீடற்ற துளிகள்

கிழக்கில் தோண்டி
மேற்கில் புதைத்த
வண்ணமிருக்கிறது
பூமி தனது ஒளியை

உருவமற்ற நதியில்
வீழ்ந்து கிடக்கும்
சூரிய சந்திரர்களும்
கலைந்தபடியே இருக்கிறார்கள்
குறிப்புகளற்ற வாழ்க்கையில்
கைக்கடங்காத பெருவுருளையைப்
பற்றிக் கொள்ளும் முயற்சியில்
வழுக்கி விழுந்தபடியே
இருக்கிறது நிலையைத்
தேடும் ஜீவ கிரணங்கள்.

5 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

arivin thelivu....inthak kavithai:)

nira yezhutha vazhthukal daa!!

நன்றி அண்ணி. அறிவு என்னைக்காவது இப்படி பீறிகிட்டு வரும்போது எழுதிடுவோம்! :-)

//ஆழி வெப்பத்தில்
ஆவியாதலும்
மழையாதலுமாக
மாறிக்கொண்டே இருக்கிறது
வீடற்ற துளிகள்//

துளியாய் பிறப்பு
வளியாய் மார்க்கம்.
ஒளியால்.....

(எங்கள் பக்கமும் ஒளி சிந்தவேன்டாம்
துளி சிந்திவிட்டு போங்கள்..)

நன்றி..

தொடர்ந்து வாசித்து கருத்தும் இட்டுவருவமைக்கு நன்றி. :)