ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது



கண்ணாடியொன்றை
கொண்டு வந்தாள் அவள்
நாமிருவரும் இதன்முன்
தலைவாரிக் கொள்ளலாமென்றாள்
கண்ணாடியில் அவள் பிம்பம்
படியும் நேரம் அதிகமாகிப்போனது


கண்ணாடியும் அவளும்
கதை பறிமாறிக்கொண்டனர்
கண்ணாடியில் கவிதைகள் கிறுக்கினாள்
கண்ணாடி அதை வாங்கி
அவள் பிம்பத்தில் பதித்தது
கண்ணாடியுடன் ரகசியங்களும்
என்னுடன் தூரங்களும்...


தூரப் படுக்கையறையில்
துயில் கலைந்து விழித்தபொழுது
கண்ணாடியும் அவளும்
பேசிச் சிரிக்கும் சப்தம்
பேய்மழையென பெய்தது


என்னை விட அவளுக்கு
கண்ணாடி முக்கியமாகிப் போனது
நான் தலைவாரச் செல்லும்போது
கவிதைப் பேனாக்களை
மறைத்துக்கொண்டு
சீப்பைத் தேடித் துழாவுகிறாள்...


என்ன செய்கிறாய் என்றேன்...
”தலைவார வந்தேனென்றாள்”.


8 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

appadiyaa..., sari....

நன்றிங்க.

:(

ம்...

நம்ம லட்சணம் கண்ணாடிக்கே நல்லா தெரிந்து இருக்கு....இல்லையா??அருமையான...பதிவு...வாழ்த்துகள்...

ஹா ஹா... கலக்கிட்டீங்க!

வடிவேலுவின் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது நண்பா!

வணக்கம் நண்பா.
இந்தக் கவிதையை பல கோணங்களில் வாசிக்கலாம், அதனால்தான் மற்றொருவர் யாரென்பதை அதில் தெளிவுபடுத்தவில்லை, அது தோழியாகவோ, கணவனாகவோ கூட இருக்கலாம். கண்ணாடி என்பது இங்கே மாற்று ஒருவராகக் கொள்ளும்படி எழுதியிருக்கிறேன். மற்றபடி கதை வாசகர்களின் ஊகத்திற்கு.