ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாதுதனிமையின்
பேய்க்கரங்களால்
என்னைச் சூழ்ந்திருந்த
வெய்யிலில்
தவிர்க்க முடியாத
காரணங்களுக்கு
அடிமையானவனாய்
உனது கோரிக்கைகளை
நிராகரிக்கும் கோடாரிகளாக
எனது சொற்களுக்கு
வலுவூட்டிக்
கொண்டிருந்தேன்
நாம் நடந்த
ஒரு சாலையில்
நடந்து செல்லும்போது
அகலப்படுத்துதலின்
பெயரில் மரங்கள்
அகற்றப்பட்டிருந்தன
சாலைக்குப்
புரிந்திருக்கும்
என்
விலகுதலின் வலி.
தமிழ் ஆத்தர்ஸில் வெளியிட்டதற்கு நன்றி

3 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

வலி மிகு கவிதை

நன்றி ஆபிரகாம். வலிகளில்லாத வழியினில் யார் பயணத்திருக்கிறார்கள்?!

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html