ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாதுஅர்த்தங்களின்றிக் கழியும்
அந்தி நேரங்களில்
ஒரு சூனியக்காரியின்
மர பொம்மையாய்
மாறியது மனது
ஏக்கங்கள் தசைகளில்
ஏறி அதை
இறுக்கி இறுக்கி
மேலும் உணர்வுகளைப்
பலப்படுத்தியது
இரணம் இரணமாய்
வழிந்து செல்லும்
உணர்ச்சிக் கோடுகளின்
வழியே மீதமிருந்த
வெட்கமெல்லாம்
கரைந்து அழிய
தனிமையில் ஒதுங்கிய
மானின் முதல்
அலட்சியத்திற்காக
ஊடுறுவும் ஓநாயின்
கண்களோடு தசைகளைத்
துளையிட்டுத் திறக்கும்
காமம்
மழை முடிந்த பின்னும்
வழிந்து முடியாத
இலையின் தூறலாய்
அவள் கடந்த பின்னும்
தொடரும் கண்கள்.


கீற்றில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.keetru.com/literature/poems/oliyavan.php

4 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

ahaaa....
well done.

மிக்க நன்றி மயாதி. திருமணத்திற்காக ஏங்கும் ஒரு இளமை முடியப் போகும் ஒருவனின் தாகமாக எழுதினேன்.

Yennaku yennamo ithu oru anni kaamam pol thondra villai.
itho yennathu karuthu:

Anmaiyen kaamam:
kattithazhuvugaiyel aruviyena kotti vazhiyum!
vittu vilagiyathum mothamaai maraiyum!

Penmaiyen Kaamam:
Kattithazhuvugaiyel kaanalai
odiodi oliyum!
vittu vilagiyathum yetiparthu
yengi thavikkum!

Annal unnarchigal yennamo yavarukkum pothumaiye athu yeno sila nerangalli urumari irumatiriyai thirikirathu ;)
yethenum thavaraga uraithirunthal manikkavum ;)

--Yazhisai

பெண்பால் காமமும் ஆண்பால் காமமும் அழகாக விளக்கிவிட்டாய். நன்றி.