ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது




மாதமொரு முறை
நிலாமுற்றச் சோறு,
அம்மாவின் பழக்கமது!

பருவத்தில் சொன்னேன்...
பாட்டி இல்லையம்மா
அது நிலவின்
பள்ள மேடுகளென...
என் கன்னம் கிள்ளி
கொஞ்சினாய்

மீண்டுமொரு நிலாச்சோறு
மீதமாய் நீ மட்டுமில்லை
என் பிள்ளையிடம்
சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்
"அதோ பார், நிலவில் உன் பாட்டி..."

14 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

நெகிழ்வான உணர்வுக் கவிதை...மனசை ஏதோ செய்கிறது.

உங்களது அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி அன்பரே.

அம்மா,
நிலா ,
பட்டி
அருமை....
வாழ்த்துகள் ....

மீண்டுமொரு நிலாச்சோறு
மீதமாய் நீ மட்டுமில்லை
என் பிள்ளையிடம்
சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்
"அதோ பார், நிலவில் உன் பாட்டி..."

அருமை ஒளியவன்

அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி அன்பர்களே,
சீமாங்கனி மற்றும் சக்தி.

இந்தக் கவிதையை பிரபலப் படுத்திய தமிழிஷ் அன்பர்களுக்கு நன்றி!

Very short...made me to think a lot...

நன்றி நண்பரே.

//"அதோ பார், நிலவில் உன் பாட்டி..." //

முடிவு அருமை....

வாழ்த்துக்கள்......

தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

அருமை, வாழ்க்கையின் ஓட்டத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. அம்மா, நிலா, சாப்பாடு எல்லாம் இருக்கிறது, இதை சொல்லுவது, குழந்தையின் தாயா, தந்தையா தெரிய வில்லை, தந்தை என்றே தோணுகிறது. சரியா?

நான் ஒரு ஆண் என்பதாலும், இது அடிப்படையில் ஆணைச் சார்ந்த சமுதாயமாக இருப்பதாலும், ஒரு பிள்ளைக்கு தனது அம்மாவின் பெருமைகளைப் பற்றிப் பேசுவதென்றால் அது ஆணாகத்தான் இருத்தல் வேண்டுமென்றும் நம் இயல்பில் கலந்துவிட்டது, மேலும் பருவத்தில் என்ற சொல்லும் பெண் வெளிப்படையாக பேசும் சொல்லன்று என்னும் நமது இயல்பாக இருக்கலாம். மற்றபடி இதை எழுதும் போது இருபாலாரையும் மனதில் கொண்டே எழுதினேன்.

உங்கள் கேள்வி மிக முக்கியமான கேள்வி! நன்றி.

enakkum chinna vayasula sollik koduthaanga, nilavila patti vadai suduraanganu. this poem makes me to remember the old days.

very gud oliayavan

நன்றி பாலா.