ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாதுநண்பர்கள்
'ஃபோன வையுடா' என்றார்கள்
நீயோ
'அப்புறம்' என்றாய்!

அம்மா
'ஊருக்கு வா' என்றாள்
நீயோ
'லீவ்ல எங்க போகலாம்' என்றாய்!

அப்பா
'பேசி ஒரு வாரமாச்சுல்ல' என்றார்
நீயோ
'மதியத்துல இருந்து ஏன் பேசவேயில்ல' என்றாய்!

ஊர்
'பைத்தியக்காரன்' என்றது
நீயோ
'செல்லக்குட்டி' என்கிறாய்!

9 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

:)

//ஊர்
'பைத்தியக்காரன்' என்றது
நீயோ
'செல்லக்குட்டி' என்கிறாய்!//

உங்கள் மேல் அவ்வளவு
பைத்தியம் போல...

இருக்கலாம்! காதலில் மட்டுமே கிறுக்குத்தனங்கள் அழகுபெறும்.

நான் உங்களை கவிஞன் என்கிறேன்... அவுங்க என்ன செல்லுறாங்கன்னு சொல்லமுடியுமா?

கிறுக்கனென்று... :-)

அழகிய ராட்சசிகள்...அப்படித்தான் சொல்வார்கள் (எல்லாம் அனுபவம்தான்)

உங்களது அனுபவம் இனிமையாகவே அமையட்டும். வாழ்த்துகள்.

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

மிக்க மகிழ்ச்சி அன்பரே. தொடர்ந்து எழுதுங்கள். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் வாசித்து வருகிறேன்.