ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...



http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கூடு பிரித்து வெளியேறுகிறாய்



ஒரு
வசந்தகாலத்தில்
அழைப்புகள்
ஏதுமின்றி
எனது எண்ணக்
கிளைகளின்
காதல் இலைகளினூடே
கூடுகட்டி வசித்தாய்
உன் கூட்டிற்கு
என்னிடமிருந்தே
சுள்ளிகள் கொடுத்தேன்
நான் இலைகளற்று
வெறுமையில்
தவிக்கிறேன்
இலையுதிர்காலத்தில்
இப்பொழுது ஏனோ
பிரிந்து செல்கிறாய்


ஒருமுனைக் காதல்


எனக்குள்
நிறைந்து வழியும்
உன்னை
கண்ணில் ஊற்றியவளாய்
புன்னகைத்தேன்.


என்னைப்
பற்றிய எவ்வித
பிரக்ஞையுமின்றி
கண்களைத் திருப்பிக்கொண்டாய்
உடைந்து விழுந்தது
ஏற்றுக்கொள்ளப் படாத
என்னிதயத் துண்டுகள்
நமக்கு நடுவிலே.

6 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

முதல் கவிதையின் தலைப்பு மிக அருமை. வாழ்த்துகள்.

தலைப்பு வைப்பதில்தான் எப்பொழுதுமே எனக்கு சிக்கல் ஏற்படும். சமீப காலமாக அதை சரி செய்து வருகிறேனென்றே நம்புகிறேன். உங்கள் தெம்பூட்டும் வரிகளுக்கு நன்றி நிலா அண்ணா.

vasanthakalam matrum ilaiyuthir kalam irandum naanaiyathin irupakkangal,unakku yethu vendum yendru thernthedukkum vaippu unnidathiley irukkirathu,athu nee sundukindra thiramaiyel olinthirukkirathu ;)
varunthaathey innumoru vasanthakaalam unnai thodarum;)

-Yazhisai

இரு கவிதைகளும் இரு பாலார் எழுதுவது போல எழுதியது. முதலொன்று ஆண் பாடுவதாகவும், இரண்டாமொன்று பெண் பாடுவதாகவும்.

வசந்தகாலங்கள் எத்தனையும் வரலாம் அதை ரசிக்க அதே மனநிலை மீண்டும் வருமா என்பதே கேள்வி.

intha ulagil yentha oru uravugalum orey uravudan mudivathilai...
athu thodarum yar thaduthalum nirkathu...
kattayam மனநிலை மீண்டும் varum.. mattrangal onrey maratha ondru..
yazhisai

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யாழிசை.