ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

உன் பாதைகள் நோக்கியே
என் பாதங்கள் செல்வதை
நிறுத்தமுடியாமல் திரும்புகிறேன்.

உன் பேச்சுக்களைக் கேட்கவே
என் காதுகள் கூர்மையாவதை
தவிர்க்கமுடியாமல் தோற்கிறேன்.

நம் முகம் இரண்டும்
நேரே பார்க்க மறுத்தாலும்
புன்னகைத்துக் கொள்வது உண்மை.

நீயும் நானும் மகிழ்ந்து குலாவியதை
நியாபக அடுக்குகளில் தேடி
அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் கூட்டை வந்தடையும்
மென்மையான பொழுதுக்காக
அடிவாரமிட்டிருக்கிறது நம் ஊடல்.

நிலாச்சாரலில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.nilacharal.com/ocms/log/11100806.asp

2 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

;) Kathalai pol thondru kiratha,yena seivathu ippozhthu yellam naal natpai parpathu kadinama irukkirathu..
athan paditha udaney yennaku yenno kathal yndru thondriyathu..;)
-Yazhisai

வருக யாழிசை.

காதலுக்கு நட்பிற்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை காமத்தைத் தவிர!

நான் மிகவும் மகிழ்ந்து கொள்ளும் ஒரு விசயம், என் நண்பர்கள்தான்.