ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது


சொத சொதவென
இரத்தச் சகதியில்
நீ
இறுதி மூச்சை
இறுக்கிப் பிடித்தபடி
போகிறாய்.

உன்னைக் கரைசேர்க்கவல்ல
உதவிக் கரங்கள்
உலக சந்தையில்
விற்பனையாகிவிட்டன.

உன்னைப்
பின் தொடர்கிறது
பிணந்தின்னிக் கழுகு.

உன்
மரணச் செய்தி
பணம் காய்க்கும்
வித்தை அவர்களுக்கு.

நீ
நிம்மதியாக உறங்கு
உன்
மரணமும்
உதவுகிறது.

3 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

வாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது

மிக்க நன்றி நண்பரே என்று கூற முடியாத நிலைதான். இந்த சோக நிகழ்ச்சியில் மகிழ்ச்சி கொண்டாட ஏதுமில்லைதான்.

வாழ்த்துக்கள்...

முடிந்தால் என்ன வலைப்பதிவை பார்க்கவும்\
WWW.SOWMI-
KATTRADHUTAMIL.BLOGSPOT.COM.