ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது


கொடுப்பதுமின்றி
எடுப்பதுமின்றி
புரிதலில் ஊறிய
பேச்சுக்கள்
உனக்குமெனக்குமான
உள்ள வாசல்கள்.

தொடுகையின் நேரத்தில்
சலனமற்ற உனது விரல்கள்
வசந்த காலப் பொழுதின்
புதிய தளிர்களாய்
என்னுள்.

உன் வேர்கள்
உனக்கான இடத்திலேயே
இருப்பதும் உன்
இலைகள் எனக்கான
இடத்தில் நிழல்
தருவதுமே நட்பின் சாட்சி.

நாளை துவங்கும்
எனது நெடுந்தூரப்
பயணத்தில் நமது
பிரிவைக் கடக்கவல்ல
துடுப்பைப் பரிமாறிச்
சென்று கொண்டிருக்கிறாய்
'எனக்கெதிரான திசையில்!'

வார்ப்பில் வெளியிட்டமைக்கு நன்றி


2 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

அருமை நண்பா அருமை! மிக அழகாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். உங்கள் பயணக் குறிப்பேடு சேதி சொல்கிறது.

மிக்க நன்றி நண்பா. உங்கள் தொடரும் ஆதரவிற்கு மிக்க நன்றி.