ஒளியவன் கீற்றுகள்

எண்ணங்களுடன் கலவி கொண்டு கவிதையைப் பிரசவிக்கும் என் பேனா

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது1.
யாருமற்ற தனிமையில்
விடுபடாது இருந்தது
உன் நினைவு.


உனது கடந்தகால
நினைவுகள்
எனது நிகழ்காலத்தை
உறிஞ்சிக் கொண்டிருந்தது.


சூல் கொண்ட
பூவாய் நான்!
தேன் குடித்து விட்டுப்
பறந்த வண்டாய் நீ!


2.
என் ஏகாந்த
தனிமையில் சுழல்கின்ற
நொடி'முள்ளாய்' நீ.


என் இரவிற்கு
வெள்ளையடித்துவிட்டு
போனது உனது வார்த்தை
மின்னல்கள்.


மின்னல் கிழித்துப்போன
மேக ஓட்டையில்
கண்ணீர் கசிகிறது
மாமழையாய்.


3.
கல்லறை தூரமானது,
கருவறையில்
உன் பிரதி.


துரோகச் சிலுவையில்
என்னை அறைந்துவிட்டு
மூன்றாம் மாதம்
உயிர்த்தெழுந்திருக்கிறாய்.


முற்றுப் புள்ளி
எட்டாத எனக்கு
கேள்விக்குறியாய் உன்
நினைவு முட்கள்.

அதிகாலையில் வெளியிட்டமைக்கு நன்றி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14131&lang=ta&Itemid=164

6 பின்னூட்டங்கள்(u can write ur comments here):

Really awesome...Vaarthaila vilayaadureenga...

நன்றி சிம்மா. விளையாட்டாத்தான் எழுதினேன், ஆனா வார்த்தையில விளையாண்டனான்னு தெரியல.

arumai! arumai! thozharey miga arumai!
Yerumaikum printhuvidum unathu unnarvugal!
puriyamal ponathen? avalukku mattum!
Innum kaanavillai unatharugil avalai!---- oruvalai
urainthu kidakkum kavithaigalai velikonaravo!


Ivan,
Yazhisai

துரோகம் என்ற சொல் மிகக் கொடூரமானது. அதுவும் ஒரு பெண்ணை நம்பவைத்து கருத்தரிக்க வைத்து கைவிடுவதைப் போலவொரு துரோகமில்லை. அந்த நினைவு முட்கள் உள்ளுக்குள்ளே மக்கிப் போகாமல் குத்திக் கொண்டேதான் இருக்கும்.

unmaithann! kalam marivittathu.. tharpozhuthu angalai yemattrum pengalum undu;......;(
yazhisai

திறந்த கருத்திற்கு நன்றி யாழிசை.